×

ரூ.1.50 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் பொறியாளர்கள் நேரில் ஆய்வு வேலூரில் நவீன மருத்துவமனையை முதல்வர் திறப்பதையொட்டி

வேலூர், ஜூன்.12- வேலூரில் நவீன மருத்துவமனையை முதல்வர் திறப்பதையொட்டி, ரூ.1.50 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை பொறியாளர் குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி வேலூர் ஜிபிஎச் சாலையில் கட்டப்பட்டுள்ள நவீன மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளனர். இதனையொட்டி, வேலூர் ஜிபிஎச் சாலையில், ஏற்கனவே இருந்த பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கும் பணிகள் நேற்று ெதாடங்கியது. இதனை மாநகராட்சி செயற்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகிேயார் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஜிபிஎச் சாலை, அரசமரத்தெரு, வேலப்பாடி, காந்திநகர் 5வது குறுக்கு தெரு, அண்ணாநகர் 7வது குறுக்கு தெரு என்று வார்டு 38, 44, 45, 46, 50 ஆகிய வார்டுகளில் ரூ.1.50 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு சில வாரங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.1.50 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் பொறியாளர்கள் நேரில் ஆய்வு வேலூரில் நவீன மருத்துவமனையை முதல்வர் திறப்பதையொட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Vellore ,Tamil Nadu Urban Road Development Project ,Vellore Corporation… ,Dinakaran ,
× RELATED வேலூரில் இருந்து 40 சிறப்பு பஸ்கள்...