×

நார்வே கிளாசிக்கல் செஸ்; 19வது பிறந்தநாளில் குகேஷ் அசத்தல் வெற்றி

ஸ்டாவஞ்சர்: அமெரிக்காவின் பேபியானோ கருவானா, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, இந்தியாவின் அர்ஜூன் எரிகேசி, டி.குகேஷ், சீனாவின் வெய் இ ஆகியோர் மோதும் நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.

தொடர்ச்சியாக இரு சுற்றுகளில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சன், இந்தியாவின் எரிகேசியிடம் தோல்வியடைந்த உலக சாம்பியனான டி.குகேஷ் நேற்று நடந்த போட்டியில் உலகின் 2வது நிலை வீரரான அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் மோதினார். ஆட்டத்தின் 42வது நகர்த்தலில் சிறந்த ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வீரர்களில் ஒருவரான ஹிகாரு நகமுராவை திணறடித்து தோற்கடித்தார். நேற்று குகேஷின் 19வது பிறந்தநாளாகும். இந்த வெற்றி அவரது பிறந்தநாள் பரிசாக அமைந்ததாக குகேஷின் ஆதரவாளர்கள் ஆரவாரித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் குகேஷூக்கு 3 புள்ளிகள் கிடைத்தன. பேபியானோ 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சன் 5 புள்ளிகளுடனும், ஹிகாரு நகமுரா, அர்ஜூன் எரிகேசி 4.5 புள்ளிகளுடனும், குகேஷ் 3 புள்ளிகளுடனும், வெய் இ 2.5 புள்ளிகளுடனும் களத்தில் உள்ளனர்.

The post நார்வே கிளாசிக்கல் செஸ்; 19வது பிறந்தநாளில் குகேஷ் அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Norway Classical Chess ,Kukesh ,Stavanger ,America ,Fabiano Caruana ,Norway ,Magnus Carlsen ,Hikaru Nakamura ,India ,Arjun Eriksen ,D. Kukesh ,China ,Wei Yi ,Stavanger, Norway ,
× RELATED வெ.இண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்ட்; 323 ரன்...