×

அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன்

திருச்சி, மே 22: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட தென்னக ரயில்வே ஸ்டேஷன்களின் கீழ் இயங்கும் 13 மேம்படுத்தப்பட்ட ரயில் ஸ்டேஷன்களை இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் தற்போது 103 மேம்படுத்தப்பட்ரயில்வே ஸ்டேஷன்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று (மே 22ம் தேதி) திறந்து வைக்கிறார். இதில் பொதுமக்கள், மாணவர்கள், ரயில்வே ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

மாணவர்களுக்கு தேசபற்று சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். தென்னக ரயில்வேவின் கீழ் இயங்கும் 13 ரயில்வே ஸ்டேஷன்கள் அமிரித் ரயில்வே ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது அதில் திருச்சி கோட்டத்தின் கீழ் இயங்கும் சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் ரூ.5.96 கோடியிலும், ரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரூ.6.77 கோடியிலும், திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் ரூ.8.27 கோடியிலும், போலூர் ரயில்வே ஸ்டேஷன் ரூ.6.15 கோடியிலும், விருதாச்சலம் ரயில்வே ஸ்டேஷன் ரூ.9.17 கோடியிலும், மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷன் 4.69 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள ரங்கம் ரயில்வே ஸ்டேஷன் மக்களில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் இங்கு ரயில்வே நிலையம் தங்கும் அறை, தங்கும் விடுதி, ஓய்வு அறை, இணையவழி வசதிகள், மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிட வசதி, போன்றவை வருகை தரும் பக்தர்களுக்கு ஏற்ப கட்டியமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரங்கம் ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில் ரங்கநாதரை போற்றும் விதமான ரங்கத்தில் உள்ளது போல் ரங்கநகாதர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே நிலையங்களை இன்று இந்திய பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்.

The post அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் appeared first on Dinakaran.

Tags : Srirangam ,Railway ,Station ,Narendra Modi ,Southern Railways ,Srirangam Railway Station ,Dinakaran ,
× RELATED வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் தப்பிக்க...