திருச்சி, டிச.27: திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் இருந்து மன்னார்புரம் நோக்கி நேற்று இரவு டூவீலரில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் பின்னால் வந்த வாலிபர், அந்த பெண்ணிடம் இருந்த கைப்பையை பறித்து கொண்டு தப்ப முயன்றார். அப்போது நிலைத்தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு முகம் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவத்தில் அந்த பெண்ணுக்கும் சிறிது காயம் ஏற்பட்டு அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் லால்குடி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
