மணப்பாறை, டிச.25: திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மணப்பாறை நகரின் பிரதான போக்குவரத்து மிகுந்த சாலையானது கோவில்பட்டி சாலையாகும். தினந்தோறும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் சாலையில் பள்ளிகளுக்கு முன் வேகத்தடை அமைக்கப்படும் நிலையில், நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளிக்கு இருபுறமும் வேகத்தடை இருந்தது.
கடந்த மே மாதம் மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது அகற்றப்பட்ட வேகத்தடை இதுவரை மீண்டும் அமைக்கவில்லை. இதனால் தினந்தோறும் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வரும் நிலை இரு ப்பதால் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைத்து தர நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
