×

ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து அரியானா பேராசிரியருக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அரியானா மாநிலம் அசோகா பல்கலை பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து அரியானாவில் அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மே மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கேட்டு பேராசிரியர் மஹ்முதாபாத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என். கோட்டிசார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, இடைக்கால ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. மேலும் மனுதாரர் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கருத்துக்களை புரிந்து கொள்ள அரியானா, டெல்லி மாநில காவல்துறையை சேராத ஐஜி தகுதி கொண்ட அதிகாரி தலைமையில் பெண் அதிகாரி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து அரியானா பேராசிரியருக்கு இடைக்கால ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Haryana ,Operation Sindhu ,New Delhi ,Ali Khan Mahmudabad ,Ashoka University ,
× RELATED புத்தாண்டை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: கார்கே அறிவிப்பு