நாகர்கோவில், மே 22: சேலம் கோட்டத்தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரயில் எண் 22504 திப்ரூகார்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் திப்ரூகாரில் இருந்து மே 22, 24 தேதிகளில் இரவு 7.35 மணிக்கு புறப்படுவது இருகூர், போத்தனூர் வழியாக செல்லும், கோயம்புத்தூர் செல்லாது. கூடுதலாக போத்தனூரில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 10.42க்கு வந்து 10.45க்கு புறப்படும்.
துணை முதல்வரிடம் வாழ்த்து
திமுக பிரமுகர் ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபர், மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சக்கர்மேரி டார்லிங்றோஸ் ஆகியோர் மகள் பிஷோலா ஜா. ச. செப்பாஷியா, நாகர்கோவில் என்.ஜி.ஓ.காலனி வே.பி. மணி – ஜோஸ்லின் ஞான கிறிஸ்டி ஆகியோரின் மகனும், இவான்ஸ் குரூப் கல்வி நிறுவனங்களின் தலைவருமான பி. வெல்பின் ஆகியோர் திருமணம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. புதுமண தம்பதிகள் இருவரும் சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
The post திப்ரூகார் ரயில் போக்குவரத்தில் மாற்றம் appeared first on Dinakaran.
