×

நாசரேத் பேக்கரியில் திடீர் தீ

நாசரேத், மே 16:நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் அருகே வணிக வளாகம் உள்ளது. இங்கு நாசரேத்தை சேர்ந்த முருகன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த கடையையொட்டி தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பேக்கரியின் பின்புறம் மற்றும் தனியார் நிறுவன கட்டிடத்தில் இருந்து நேற்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட இப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜான்சன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை தடுத்து அணைத்தனர். பேக்கரியில் பயன்படுத்தப்பட்ட அடுப்பில் இருந்து தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் இந்த சம்பவத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீ பரவலை தடுத்து அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

The post நாசரேத் பேக்கரியில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Nazareth Bakery ,Nazareth ,Nazareth Kamaraj Bus Stand ,Murugan ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா