×

எளாவூர் சோதனைச் சாவடியில் டேங்கர் லாரியில் ஏற்றி சென்ற சிலிண்டர்களில் காஸ் கசிவு

கும்மிடிப்பூண்டி, மே 15: தமிழக ஆந்திர எல்லையான எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னை, திருச்சி, சேலம் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் அரியானா மாநிலத்தில் இருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டேங்கர் லாரி ஆறு அடுக்குகள் கொண்ட கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு எளாவூர் சோதனைச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது டேங்கர் லாரியில் உள்ள ஒரு பகுதியில் காஸ் லீக் ஆனதை தொடர்ந்து வாகன ஓட்டுநர் அதிஷ்டவசமாக வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அருகே இருந்த காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேரம் ரசாயனம் கலந்த கலவையை பீய்ச்சி அடித்து காஸ் லீக்கை சரி செய்தனர். பின்னர் 2 மணி நேரத்துக்கு பிறகு லாரி மணிலியில் உள்ள இன்ஜின் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சென்றது.

The post எளாவூர் சோதனைச் சாவடியில் டேங்கர் லாரியில் ஏற்றி சென்ற சிலிண்டர்களில் காஸ் கசிவு appeared first on Dinakaran.

Tags : Elavur ,Gummidipoondi ,Tamil Nadu-Andhra Pradesh border ,Chennai ,Trichy ,Salem ,Haryana… ,
× RELATED காசிமேடு கடலில் ஆண் சடலம் மீட்பு