×

திருவள்ளூரில் வரும் 30ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர், டிச.27: திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை, கூட்டுறவு துறை, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய பெருமக்களும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகாண மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Tags : Thiruvallur ,M. Pratap ,Thiruvallur District Collector ,Pratap ,Thiruvallur District Collector's Office ,
× RELATED திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக...