- தென்மேற்கு பருவமழை
- கோயம்புத்தூர்
- மாவட்ட கலெக்டர்
- பவன் குமார்
- வருவாய் அதிகாரி
- ஷர்மிளா
- ஆர்டிஓ
- ராம்குமார்
- பொள்ளாச்சி
- சப்-கலெக்டர்
- விஸ்வநாதன்
கோவை, மே 13: விரைவில் பருவ மழை துவங்கும் நிலையில், மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய் அலுவலர் ஷர்மிளா, ஆர்டீஓ ராம்குமார், பொள்ளாச்சி சப் கலெக்டர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதி, கிராமங்கள், நீர் வரத்து அதிகம் உள்ள பகுதி, கடந்த காலங்களில் அதிக மழை பெய்த இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அந்தந்த பகுதி வருவாய்த்துறையினர் மழை காலங்களில் பணியாற்ற வேண்டும்.
அதிக வெள்ளம் வரும் பகுதிகளில் முன் கூட்டியே உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக சீரமைப்பு பணி நடத்த வேண்டும். மழை நீரை நீர் தேக்கங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் தடுக்கும் வகையில் தீயணைப்பு துறை உள்ளிட்டோர் ஆயத்தமாக இருக்க வேண்டும். நீர் தேக்கங்கள் நல்ல முறையில் உள்ளதா என பொதுப்பணித்துறையினர் மூலமாக ஆய்வு செய்ய வேண்டும் என இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
The post விரைவில் தென் மேற்கு பருவ மழை: அதிகாரிகள் குழு ஆலோசனை appeared first on Dinakaran.
