×

முண்டியடித்து பேருந்தில் ஏறும் பயணிகள் லிங்காபுரம் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் – காந்தவயல் இடையே காந்தையாற்றின் குறுக்கே ஏற்கனவே இருந்த உயர்மட்ட மேம்பாலம் கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி வந்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு லிங்காபுரம் – காந்தவயல் இடையே காந்தையாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.18.36 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், லிங்காபுரம் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்ட நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் செந்தில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி அவர் அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரரிடமும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் குருமூர்த்தி,உதவி பொறியாளர் ராமசுப்பிரமணியம் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post முண்டியடித்து பேருந்தில் ஏறும் பயணிகள் லிங்காபுரம் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Lingapuram ,Mettupalayam ,Kandhaiyar river ,Sirumugai Lingapuram ,Kandhavayal ,Bhavani river ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு