×

போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சு

புதுடெல்லி: போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் நேற்று முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர் கடந்த சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓக்கள்)நேற்று மதியம் 12 மணிக்கு பேச திட்டமிடப்பட்டிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை 5 மணியளவில் தொடங்கின. இதுபற்றி ராணுவம் தெரிவித்த அறிக்கையில்,’டிஜிஎம்ஓ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளன. மேலும் விவரங்கள் கிடைத்த பிறகு அவை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Pakistan ,Director Generals of Military Operations ,DGMOs ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...