ரியாத்: சவுதியில் 30 ஆண்டுகளில் முதல்முறையாக பனியால் சூழப்பட்டது. கடும் வெப்பத்திற்கும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கும் பெயர் பெற்ற நாடான சவூதி அரேபியாவில் சமீபகாலமாக பனிப்பொழிவு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு சவூதி அரேபியாவில் ஆச்சரியமூட்டும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இது தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர் முழுவதும் பனி படர்ந்துள்ளது.
சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட ஜெபல் அல்-லாவ்ஸ் மலையில் அமைந்துள்ள உயரமான சுற்றுலாத் தலமான ட்ரோஜெனாவில், லேசான மழையுடன் பனி போர்த்தியிருந்தது. ஹைல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹைல் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது.அதிகாலை நேரங்களில் சில இடங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கும் கீழே சரிந்தது.
