மாஸ்கோ: ரஷ்யாவில் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சி இயக்குனரகத்தின் தலைவராக இருந்தவர் லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ். தெற்கு மாஸ்கோவில் உள்ள யசெனேவா தெருவில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் காலை ஒரு கார் வெடித்து சிதறியது. காருக்கு கீழே வைத்திருந்த குண்டு வெடித்து இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் காருக்குள் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ் என ரஷ்யாவின் புலனாய்வு குழுவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஸ்வெட்லானா பெட்ரென்கோ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் உக்ரைனின் உளவுத்துறை சேவைகளால் திட்டமிடப்பட்டது என்று சந்தேகிக்கப்படுகின்றது.
