×

தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது: ஏர் மார்ஷல் பேட்டி

டெல்லி: தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது என ஏர் மார்ஷல் பேட்டி அளித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் முப்படைகளின் தலைமை இயக்குநர்கள் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்து வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தந்தபோதும் அந்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்னையாக மாற்றுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் இந்தியாவிற்கு சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக விளங்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

The post தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது: ஏர் மார்ஷல் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Air Marshal ,Delhi ,Chief Directors ,Tripartite Forces ,Operation Chintour operation ,Pakistan ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...