×

ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப்.1ல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28 அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இது நிர்மலா சீதாராமனின் 9வது பட்ஜெட் ஆகும்.

இது முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்த சாதனை 10 பட்ஜெட்டுகளில் ஒன்று குறைவாகும். முதல் பகுதி கூட்டத்தொடர் பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடைந்து மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடும். பின்னர் ஏப்.2ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : General ,Lok Sabha ,Speaker ,Om Birla ,New Delhi ,Budget Session of Parliament ,President ,Draupadi Murmu ,Finance Minister ,Nirmala Sitharaman ,Houses of Parliament… ,
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...