×

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு இந்தியா: அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கருத்து

புதுடெல்லி: “அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடு இந்தியாதான்” என அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு வருகை தந்துள்ள செர்ஜியோ கோர் நேற்று அமெரிக்க தூதரகத்தில் உரையாற்றினார். அப்போது, “அமெரிக்காவும், இந்தியாவும் முன்மொழியப்பட்ட பொதுவான நலன்களால் மட்டுமல்ல, மிக உயர்ந்த அளவிலான வேரூன்றிய உறவுகளாலும் பிணைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு, தீவிரவாதம் ஒழிப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் இருநாடுகளும் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுகின்றன. இந்தியாவும், அமெரிக்காவும் முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

வரவுள்ள மாதங்களில் அல்லது ஆண்டுகளில் மிகவும் லட்சியமான செயல்திட்டங்களை முன்னெடுப்பதே ஒரு தூதராக என்னுடைய இலக்கு. உண்மையான நண்பர்கள் உடன்படாமல் இருக்கலாம், ஆனால், முடிவில் தங்கள் வேறுபாடுகளை எப்போதும் தீர்த்து கொள்வார்கள். ஏனெனில் அமெரிக்காவின் மிக முக்கியமான நட்பு நாடு இந்தியா” என்று தெரிவித்தார்.

Tags : India ,America ,US ,Ambassador ,Sergio Gore ,New Delhi ,Delhi ,Embassy ,
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...