×

பெண்களின் ஆபாச படங்களால் சிக்கல் இந்தோனேசியா, மலேசியாவில் க்ரோக் செயலிக்கு தடை

கோலாலம்பூர்: பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளத்துடன் இணைந்து க்ரோக் செயற்கை நுண்ணறிவு சேவை இயக்கப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான க்ரோக், பெண்கள், குழந்தைகளின் படங்களை ஆபாசமாக மாற்றி காட்டுவது, தவறான புகைப்படங்களை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து இந்தோனேசியாவில் க்ரோக் இணையதளம் மற்றும் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில், “க்ரோக் ஏஐ பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன. இது இந்தோனேசிய சட்டம் மற்றும் கலாச்சார உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.

மேலும், இதனால் பெண்கள், குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே க்ரோக் இணையதளம் மற்றும் செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரோக் செயற்கை நுண்ணறிவுக்கு தடை விதித்துள்ள முதல் நாடாக இந்தோனேசியா மாறி உள்ளது. இதைத்தொடர்ந்து மலேசியாவிலும் க்ரோக் இணையதளம் மற்றும் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : Indonesia, Malaysia ,Kuala Lumpur ,Krok ,Elon Musk ,
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...