×

சமூக அறிவியலில் பாடங்ககளை குறைத்து; மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்: தமிழ்நாடு சமூக ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்

திருச்சி, மே 11: தமிழ்நாடு சமூக அறிவியல் ஆசிரியர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்றார், மாநிலத்தலைவர் ஜான்கென்னடி, மாநில துணை தலைவர் காதர் அலி தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் மற்ற பாடங்களை விட அதிகமான பக்கங்களையும், அதிகமான பாடங்களையும் கொண்டுள்ள சமூக அறிவியல் பாடத்தில் பாடங்ககளை குறைத்து மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

சமூக அறிவியல் பாடத்திற்கு 7 பாட வேலைகள் வழங்க வேண்டும், புத்தக்கத்தில் இல்லாத, அரசு பொதுத்தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினா 43ஐ நீக்க வேண்டும், அதற்கு பதிலாக புத்தகத்தில் உள்ள பொருத்துக வினாவை வழங்க வேண்டும், காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளை மாநில அளவில்ல ஒரே மாதிரியான வினாத்தாள் வடிவமைப்பை கொண்டு நடத்திட வேண்டும்.

அரசு பொது தேர்வில் ஒவ்வொரு வருடமும் சமூக அறிவியல் பாடத்தை இறுதி தேர்வாக நடத்தாமல் சுழற்சி முறையில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் மாநில செயலர் நாகப்பன், மாநில பொருளாளர் செந்தில்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் ரஜினி, மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர்பாண்டியன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராகுல்கண்ணன் நன்றி கூறினார்.

The post சமூக அறிவியலில் பாடங்ககளை குறைத்து; மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்: தமிழ்நாடு சமூக ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Federation ,of Social Teachers ,Trichchi ,Tamil ,Nadu Federation of Social Sciences Teachers Inauguration Ceremony ,Mahalakshmi ,Jankennady ,vice-president ,Khadar Ali ,Tamil Nadu Federation of Social Teachers ,
× RELATED வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் தப்பிக்க...