×

எஸ்.ஏ.கல்லூரியில் மனித வள மாநாடு

 

திருவள்ளூர், மே 5: திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தொழில் மேம்பாட்டுப் பிரிவு, ‘வளாகத்தில் இருந்து பெரு நிறுவனத்திற்கு – மனித வள மாநாடு 2.0’வை இரண்டு நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டிற்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கட்ராஜா தலைமை தாங்கினார். இயக்குனர் சாய் சத்தியவதி, கல்லூரி முதல்வர் மாலதி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாடு மாணவர்கள் வேலை வாய்ப்பின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ளுவதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், 20க்கும் மேற்பட்ட மனித வள நிபுணர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களை ஒருங்கிணைத்தது இம்மாநாட்டின் சிறப்பம்சம் ஆகும். கலந்துரையாடல்கள் 4 சிறப்பு அமர்வுகளாக அமைந்திருந்தன. முதல் அமர்வில் காட்சித் தொடர்பியல் துறை, ஆங்கிலத்துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

2ம் அமர்வில் ஊட்டச்சத்து மற்றும் உணவு மேலாண்மைத் துறை, உளவியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். 3ம் அமர்வு கணினி அறிவியல் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. 4ம் அமர்வு வணிகவியல் துறை மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் கல்லூரியின் நிலைப்பாட்டை மாநாடு எடுத்துரைத்தது.

The post எஸ்.ஏ.கல்லூரியில் மனித வள மாநாடு appeared first on Dinakaran.

Tags : Human Resource Conference ,S.A. College ,Thiruvallur ,S.A. College of Arts and Science ,Thiruverkut ,Large Enterprise – Human Resource Conference ,S.A. ,College ,Dinakaran ,
× RELATED காசிமேடு கடலில் ஆண் சடலம் மீட்பு