×

4,000 ரன் ஜோராய் அடித்த ஜோஸ் பட்லர்

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் அபாரமாக ஆடி 37 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அதன் மூலம், குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அந்த போட்டியில் பட்லர் 42 ரன் எடுத்திருந்தபோது, ஐபிஎல் போட்டிகளில் 4,000 ரன்களை எட்டினார். தவிர, ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் 4,000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில், சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி, 3ம் இடத்தை பட்லர் பிடித்தார்.

The post 4,000 ரன் ஜோராய் அடித்த ஜோஸ் பட்லர் appeared first on Dinakaran.

Tags : Jos Buttler ,Gujarat ,IPL ,Sunrisers Hyderabad ,Buttler… ,Dinakaran ,
× RELATED வெ.இண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்ட்; 323 ரன்...