×

இந்தியா போரிட முடிவு செய்தால் வெடிகுண்டு அணிந்து தற்கொலைப்படையாக மாறி பாகிஸ்தான் போருக்கு செல்வேன்: கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேச்சு

பெங்களூரு: பாகிஸ்தான் மீது போர்தொடுத்தால் வெடிகுண்டு அணிந்து தற்கொலைப்படையாக மாறி போரிட தயாராக இருக்கிறேன் என கர்நாடகா அமைச்சர் ஜமீர்அகமதுகான் கூறினார். கர்நாடக மாநிலம் விஜயபுராவில் மாநில வக்பு மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர்அகமதுகான் நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான், நமது எதிரி நாடு. எதிரி நாட்டுடன் நமக்கு எப்போதும் உறவு கிடையாது. பாகிஸ்தானுக்கும் நமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

ஒன்றிய அரசு பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என முடிவு செய்தால் போர்முனைக்கு நானே சென்று போரிடுவேன். எந்தவொரு உயிரும் மதிப்பு மிக்கது. நாங்கள் இந்தியர்கள், நாங்கள் இந்துஸ்தானிகள், எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டுமானால், நான் போராடத் தயாராக இருக்கிறேன்.

ஒரு அமைச்சராக, அவர்கள் என்னை அனுப்பினால், நான் முன்னணியில் செல்வேன். தேவைப்பட்டால், நான் தற்கொலை வெடிகுண்டை அணிவேன். நான் நகைச்சுவையாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டுப் பேசவோ இல்லை. நாட்டிற்கு நான் தேவைப்பட்டால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எனக்கு ஒரு தற்கொலை வெடிகுண்டைக் கொடுக்கட்டும், நான் அதை அணிந்து பாகிஸ்தானுக்குச் செல்வேன்’ என்றார்.

The post இந்தியா போரிட முடிவு செய்தால் வெடிகுண்டு அணிந்து தற்கொலைப்படையாக மாறி பாகிஸ்தான் போருக்கு செல்வேன்: கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Karnataka ,Minister ,Bengaluru ,Zameer Ahmad Khan ,State ,Waqf ,Housing Minister ,Vijayapura, Karnataka ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்