×

சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!

சென்னை: திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் 648 தொழிலாளர்கள் தங்கும் வகையில் ரூ.37.25 கோடி மதிப்பில் தொழிலாளர் தங்கு விடுதி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்போட்டையில் உலக வேலையிட பாதுகாப்பு மற்றும் உடல்நல தினத்தை முன்னிட்டு சிம்ஸ் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஆண்டுதோறும் ஏப்ரல்- 28 ஆம் நாள் உலக தொழிலாளர் வேலையிட பாதுகாப்பு மற்றும் உடல் நல தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு சிம்ஸ் மருத்துவமனையும் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை சங்கமும் இணைந்து இன்று இந்த மாபெரும் மருத்துவ முகாம் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்து நடத்தப்படுகிறது. சிம்ஸ் மருத்துவனைக்கும் டைமா சங்கத்திற்கும் என் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் திருமுடிவாக்கம் சிட்கோவில் 700 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் உடல் நலத்தினை பரிசோதித்துக் கொள்ள இன்று சிம்ஸ் மருத்துவமனை இங்கு மருத்துவ முகாமினை நடத்துகிறது.

இந்த முகாமில் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் கண் பரிசோதனை காது, முக்கு, தொண்டை வயிறு, குடல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் என தேவையான உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்குரிய அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும் இங்கு வந்துள்ளனர். இதனை தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து முதல்வர் அவர்கள் 2 துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒன்று கல்வி மற்றொன்று மருத்துவம். மருத்துவத்துறையை பொறுத்தவரை ஐநாசபையே பாராட்டிய, 2 கோடியே 4 லட்சம் மக்கள் பயனடையும் மக்களைத் தேடி மருத்தும் திட்டம், 3.43 லட்சம் மக்களின் உயர்களை காப்பாற்றிய இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக செயல்படுத்தி வருகிறார்.

திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் ரூ.33.33 கோடி அரசு மானியத்துடன், ரூ.47.62 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்பட்டுவருகிறது. இதில் ரூ.18.18 கோடி மதிப்பில் முதல் கட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. திருமுடிவாக்கத்தில் 648 தொழிலாளர்கள் தங்கும் வகையில் ரூ.37.25 கோடி மதிப்பில் தொழிலாளர் தங்கு விடுதி நடப்பு படஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. கழக அரசு பொறுப்பேற்று இதுவரை 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்பேட்டைகளிலும் மின்சாரம், சாலை, குடிநீர், மழைநீர் காலவாய் என அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழச்சியில் டைமா தலைவர் ஜி.ரமேஷ்கண்ணா, சிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கார்த்தி, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, சிம்ஸ் மருத்துவனையின் துணைத் தலைவர் டாக்டர். ராஜ் சிவசாமி, டாக்டர் பாலாஜி, டைமா துணைதலைவர் ஆர்.செல்வம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

The post சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Tha.Mo.Anparasan ,Thirumudivakkam CIDCO Industrial Estate ,Chennai ,Thirumudivakkam CIDCO Industrial ,Estate ,Minister for Micro ,Small and Medium Enterprises ,Tha.Mo.Anparasan. ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...