×

மதுரை சித்திரை திருவிழா.. மே 12ல் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி: பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!!

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அழகர் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா எப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் மே 6ல் பட்டாபிஷேகம், 7ல் திக் விஜயம், 8ல் திருக்கல்யாணம், 9ல் திருத்தோரோட்டம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் நான்காம் நாள் காலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் வில்லாபுரம் பாகற்காய் மண்டகபடியில் எழுந்தருளும் திருவீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது பக்தர்கள், பொதுமக்களுக்கு தண்ணீரை பீச்சி அடிக்க அழகர் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவை பின்வருமாறு..

*நிகழ்ச்சியின்போது பக்தர்கள் தண்ணீரை தோல் பையில் நிரப்பி அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் அடிக்கக் கூடாது.

*வாசனை திரவியம், வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை உற்சவர் சிலை மீது பக்தர்கள் பீய்ச்சி அடிக்க வேண்டாம்.

*விரதம் இருந்து ஐதீக முறையில் தண்ணீரை பீச்சி அடிக்க பக்தர்கள், பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

மேலும், அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை ஏற்கனவே மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மதுரை சித்திரை திருவிழா.. மே 12ல் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி: பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Madurai Chithirai Festival ,Aglagar ,Vaigai River ,Madurai ,Aglagar Temple administration ,Madurai Meenakshi Sundareswarar Temple Chithirai Festival ,Dhik Vijayam ,Temple ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...