×

முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறியது; ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வா?: பரபரப்பு பேட்டி

சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறிய நிலையில் ஐபிஎல்லில் இருந்து தோனி பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த 49 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. இதுவரை மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 8 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. இதனால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இந்த தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது. கடந்த சீசனிலும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் தொடக்கத்தில் வர்ணையாளர் தோனியிடம் பேசும்போது, ரசிர்களின் உங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்தால், அடுத்த ஆண்டும் நீங்கள் விளையாடுவீர்கள் போல் தெரிகிறது என்று கேட்டார்.

அதற்கு தோனி, நான் அடுத்த போட்டியிலேயே விளையாடுவேனா என எனக்கு தெரியாது என்று தெரிவித்தார். போட்டி முடிந்த பிறகு, சென்னை அணி உரிமையாளர் மற்றும் நிர்வாக ஊழியர்களுடன் கை குலுக்கி தோனி வெகு நேரம் பேசினார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரம் சென்னை அணி தனது சொந்த மண்ணில் கடைசி போட்டி விளையாடியதால் தோனி அனைவருக்கும் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது என தோனி கூறியதால் அவர் ஓய்வு பெற உள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது.

 

The post முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறியது; ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வா?: பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : CSK ,Dhoni ,IPL ,Chennai ,49th league ,Chepauk Stadium ,Chennai Super Kings ,Punjab Kings… ,Dinakaran ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு