×

மாநில அளவில் வாலிபால் ஆட வைப்பதாக ஆசைகாட்டி பிளஸ் 2 மாணவியிடம் அத்துமீறல் பயிற்சியாளர் போக்சோவில் கைது: பயிற்சிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பதாக தானே புகார் செய்து சிக்கினார்

திருத்துறைப்பூண்டி: பிளஸ்2 மாணவியிடம் அத்துமீறியதாக வாலிபால் பயிற்சியாளர் போக்சோவில் ைகது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் முகமது கலில் ரகுமான் (34). வாலிபால் பயிற்சியாளரான இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சியாளராக சேர்ந்தார். இந்த பள்ளியில் பிளஸ்2 தேர்வு எழுதியுள்ள 17 வயதான மாணவி ஒருவர் வாலிபால் விளையாடியதை பார்த்து, உனக்கு நிறைய திறமைகள் இருக்கிறது, என்னிடம் முறைப்படி பயிற்சி பெற்றால் மாநில அளவில் விளையாட தயார் செய்கிறேன் என கலில் ரகுமான் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்த மாணவியும், மாநில அளவில் சாதிக்கும் ஆசையில் வாலிபால் பயிற்சியாளர் பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சம்மதித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவியை திருச்சி, ஓசூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதோடு அவரிடம் அத்துமீறி நடந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவியை அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்து செல்வதால் பெற்றோருக்கு அந்த பயிற்சியாளர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் பெற்றோர் மகளை வெளியூர்களுக்கு அனுப்புவதை நிறுத்தினர்.

இந்நிலையில், கலில் ரகுமான், பெற்றோருக்கு போன் செய்து வெளியூரில் வாலிபால் போட்டி இருப்பதால் மாணவியை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் பெற்றோர் மகளை அனுப்ப மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக கலில் ரகுமான், திருவாரூர் சைல்டு லைனுக்கு போன் செய்து நன்றாக விளையாடும் மாணவியை அவரது பெற்றோர் விளையாட அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவுதாக புகார் அளித்துள்ளார்.
இதை ெதாடர்ந்து சைல்டுலைன் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாணவி வீட்டுக்கு சென்று பெற்றோர் மற்றும் மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சென்று மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது பயிற்சியாளரின் அத்துமீறல் தெரியவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கலில் ரகுமானை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். கலில் ரகுமானுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதும், திருச்சியை சேர்ந்த இரண்டு குழந்தைக்கு தாயான பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

The post மாநில அளவில் வாலிபால் ஆட வைப்பதாக ஆசைகாட்டி பிளஸ் 2 மாணவியிடம் அத்துமீறல் பயிற்சியாளர் போக்சோவில் கைது: பயிற்சிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பதாக தானே புகார் செய்து சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruthuraipoondi ,Mohammed Kalil Rahman ,Vedaranyam ,Topputhurai, Nagapattinam district ,Thiruthuraipoondi, Thiruvarur district ,Dinakaran ,
× RELATED இலங்கையிலிருந்து கடத்தி வந்த ரூ.8...