×

ஜப்பானில் செப்டம்பரில் துவங்கும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்

டோக்கியோ: ஐப்பானின் நகோயா, ஐச்சி நகரங்களில் இந்த ஆண்டு செப்.19 முதல் அக். 4 ம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இது தொடர்பாக போட்டி நடைபெற உள்ள நகோயாவில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆண்கள் கிரிக்கெட் 4வது முறையாகவும், பெண்கள் கிரிக்கெட் 2வது முறையாகவும் இந்த முறை பட்டியிலடப்படுகிறது.

கடந்த முறை சீனாவில் நடந்த ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் ஆண்கள், பெண்கள் என 2 பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வென்றது. மேலும் 2028ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருக்கும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

தவிர, போட்டி நடைபெறும் ஜப்பானின் விருப்பதிற்கு இணங்க 6 வகையான கலப்பு தற்காப்புக் கலை விளையாட்டுகளும் போட்டியில் இந்த முறை இடம் பெற உள்ளன. இந்த அறிமுகத்தின் மூலம் இந்தியாவின் அன்சுல் ஜூப்லி, பூஜா தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் இப்போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

The post ஜப்பானில் செப்டம்பரில் துவங்கும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் appeared first on Dinakaran.

Tags : Japan ,Asian Games ,Tokyo ,Nagoya ,Aichi, Japan ,Olympic Council of Asia ,Japan's ,Dinakaran ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு