×

குண்டுவெடிப்பு வழக்கில் 25 ஆண்டு தலைமறைவு நெல்லை வாலிபருக்கு சம்மன்: எழும்பூர் கோர்ட்டில் மே 30ல் ஆஜராக உத்தரவு

நெல்லை: நெல்லை மேலப்பாளையம் இப்ராஹிம் சாகிப் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் முகம்மதுஅலி என்ற மன்சூர் என்ற யூனுஸ் (48). சென்னை, கோவை உட்பட 6 இடங்களில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த 1999 முதல் 25 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். இந்த வழக்குகள் தொடர்பாக முகம்மது அலிக்கு சென்னை எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து பலமுறை கைது வாரன்ட் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இதனையடுத்து எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் கீழ் மேலப்பாளையத்திலுள்ள முகம்மதுஅலி வீடு, மேலப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், மேலப்பாளையம் பஸ் நிலையம் உட்பட ஐந்து இடங்களில் சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வளர்மதி, விஏஓ பரமேஸ்வரி மற்றும் வருவாய் துறையினர் நேற்று சம்மன் ஒட்டி உள்ளனர். அதில் வரும் மே 30ம் தேதி காலை 10 மணிக்கு அல்லது அதற்கு முன்பாக முகம்மது அலி என்ற மன்சூர் என்ற யூனுஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.

The post குண்டுவெடிப்பு வழக்கில் 25 ஆண்டு தலைமறைவு நெல்லை வாலிபருக்கு சம்மன்: எழும்பூர் கோர்ட்டில் மே 30ல் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Egmore ,Muhammad Ali ,Mansoor ,Yunus ,Ibrahim Sahib Taikka Street, Nellai Melapalayam ,Chennai ,Coimbatore ,Egmore court ,Dinakaran ,
× RELATED ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் –...