×

திருப்பதியில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 7 பேரை கைது

திருப்பதி: தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட 7பேர் செம்மர கடத்தல்காரர்கள் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவின் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிரடிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது திருப்பதி அருகே லாரிகள் மூலம் செம்மரக்கட்டையில் கடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ரூ. 2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள், லாரி மற்றும் கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.

The post திருப்பதியில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 7 பேரை கைது appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tamil Nadu ,Redwood Smuggling Task Force ,Andhra Pradesh ,Sri Kalahasti ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...