- மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்ப்புற துணை சுகாதார மையம்
- மேட்டுப்பாளையம்
- மேட்டுப்பாளையம் நகராட்சி
- துணை முதலமைச்சர்
- உதயநிதி
- கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம், ஏப்.28: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு பகுதியில் நகர்ப்புற துணை சுகாதார மையம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக நேற்று கோவையிலிருந்து துவக்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்ப்புற துணை சுகாதார மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் அமுதா, நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் அஷ்ரப் அலி, துணை தலைவர் அருள்வடிவு முனுசாபி, உதவி பொறியாளர் மனோகரன், நகர் மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்ப்புற துணை சுகாதார மையம் திறப்பு appeared first on Dinakaran.
