கோவை, ஜன.9: கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (32). இவர், நகை வாங்குவதற்காக ரூ.50 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனியார் பஸ்சில் கணுவாயில் இருந்து கோவில்மேடு வந்தார். கோவில்மேடு வந்ததும் கார்த்திகா பஸ்சில் இருந்து இறங்கினார்.
அப்போது அவர் தனது கைப்பையை பார்த்த போது அதில் இருந்த பணம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கார்த்திகா அளித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
