×

4,320 மாணவர்களுக்கு லேப்டாப்

 

கோவை, ஜன. 6: கோவை மாவட்டத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் 4,320 பேருக்கு லேப்டாப் நேற்று வழங்கப்பட்டது.
சென்னையில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்த விழாவில், 4,320 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் ஆகியோர் வழங்கினர். இதில், தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 261 மாணவ மாணவியர்களுக்கும், தொண்டாமுத்தூர் அரசு கலை கல்லூரியை சேர்ந்த 240 மாணவர்கள், ஆனைக்கட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த 76 மாணவர்கள், அரசு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த 748 மாணவர்கள், கோவை அரசு மருத்துவக்கல்லூரி செவிலியர் பள்ளியை சேர்ந்த 89 மாணவிகள், அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 181 மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 426 மாணவர்கள் உள்பட மொத்தம் 12 கல்லூரிகளை சேர்ந்த 4,320 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Coimbatore ,Chennai ,
× RELATED இந்திய மருத்துவ சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு