- கே.எம்.சி.எச் மருத்துவமனை
- கோயம்புத்தூர்
- ஐரோப்பிய மருத்துவ புற்றுநோயியல் சங்கத்தின் ஆசிய மாநாடு
- சிங்கப்பூர்
- Srinidhi
- கோயம்புத்தூர் மெடிகல் சென்டர் மருத்துவமனை
- KMCH) ஆராய்ச்சி அறக்கட்டளை
கோவை, ஜன. 8: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை ஐரோப்பிய மருத்துவ புற்றுநோயியல் சங்கத்தின் ஆசிய மாநாடு நடந்தது. இதில், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் (கேஎம்சிஎச்) ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீநிதி நாராயணி சீனிவாசன் கலந்துகொண்டு தனது ஆய்வறிக்கையை சமர்பித்தார்.
இந்த மாநாட்டில், ஸ்ரீநிதி நாராயணி சீனிவாசன் ஆய்வறிக்கைக்கு ‘சிறந்த ஆய்வறிக்கை’ விருது வழங்கப்பட்டது. இதையடுத்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் ஆராய்ச்சி அறக்கட்டளை ‘சர்வதேச அங்கீகாரத்தை’ பெற்றுள்ளது. இந்த ஆய்விற்கான நிதியுதவியை ஒன்றிய அரசின் ‘அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை’ வழங்கியது.
இது தொடர்பாக மருத்துவமனையின் தலைவரும், நிறுவன அறங்காவலருமான டாக்டர் நல்லா பழனிசாமி கூறுகையில், ‘‘சென்னை ஐஐடி மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் (கேஎம்சிஎச்) ஆராய்ச்சி அறக்கட்டளை செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்’’ என்றார்.
