×

மகளிர் பண்டிகையையொட்டி பிரகாசபுரத்தில் சிறப்பு பவனி

நாசரேத், ஏப்.27: பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பிரகாசபுரத்தில் நடந்த மாபெரும் பவனியில் திரளானோர் பங்கேற்றனர். தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சேகரம் பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பெண்கள் பண்டிகை ஆராதனை மற்றும் திரு விருந்து ஆராதனை நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஆராதனையை நடத்தினார். முதலூரைச்சேர்ந்த பாத்திமா மனுவேல், ஒய்யான்குடி எலிசபெத் சாமுவேல் ஆகியோர் தேவ செய்தி கொடுத்தனர். முன்னதாக பண்டிகையை முன்னிட்டு மாபெரும் பவனி நடந்தது. பெண்கள் ஐக்கிய சங்க தலைவி பிரிடா நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து பவனியை தொடங்கி வைத்தார். பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு, சாலை தெரு மற்றும் முக்கிய வீதியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் பெண்களுக்கு வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சேகர தலைவர் நவராஜ், பெண்கள் ஐக்கிய சங்க தலைவி பிரிடா நவராஜ், சபை ஊழியர் ஸ்டான்லி, சங்க செயலாளர் நல்லம்மாள், பொருளாளர் சரோஜா, ஆலய பாடகர் குழு பொறுப்பாளர் இமானுவேல், ஆலய பணியாளர் டிக்சன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

The post மகளிர் பண்டிகையையொட்டி பிரகாசபுரத்தில் சிறப்பு பவனி appeared first on Dinakaran.

Tags : Prakasapuram ,Women's Festival ,Nazareth ,South Indian Church Thoothukudi- Nazareth Thirumandalam ,Holy Trinity Church ,Prakasapuram Shekaram ,Nazareth… ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு