×

16 பதக்கங்கள் வென்ற மூத்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான தடகள போட்டியில்

செய்யாறு, ஏப். 26: தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் மாநில துணைச்செயலாலர் பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டிவிஹார் மைதானத்தில் ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாநில துணைச்செயலாளர் பாபு தலைமையில் 5 ஆண்கள் 6 பெண்கள் என 11 வீரர்கள் பங்குபெற்றனர். பெண்கள் பிரிவில் பி.ஜி.சுமதி(60+) 400 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், 800மீ, 400மீ, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் ஆகியவற்றில் வெண்கலமும், கே.சுஜாதா(50+) உயரம் தாண்டுதலில் தங்கமும், ஈட்டி எறிதலில் வெள்ளியும், 400 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளியும்..டாக்டர்.கே.சுபலட்சுமி (50+) நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் ஆகியவற்றில் வெண்கலமும், 400 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளியும்., ஆர்.கலா.மற்றும் ஆர்.திலகம் (55+) 400மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், ந.கல்பனா(40+) சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளியும் பெற்றுள்ளனர். அதேபோல் ஆண்கள் பிரிவில் நா.பாபு(40+) சங்கிலிகுண்டு எறிதலில் வெண்கலமும்..டி.மணிமலர்(55+) தொடர் ஓட்டத்தில் வெண்கலமும். என 1 தங்கம் 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைபெற்று தமிழ்நாட்டிற்க்கும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளனர். பதக்கங்கள் வென்றவர்களை மாவட்ட தலைவர் சேட்டு மற்றும் பொருளளார் கோவேந்தன் மற்றும் மூத்த நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post 16 பதக்கங்கள் வென்ற மூத்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான தடகள போட்டியில் appeared first on Dinakaran.

Tags : NADU SENIOR ATHLETIC ASSOCIATION STATE DEPUTY SECRETARY ,BABU ,NATIONWIDE SENIOR EVENT ,SAMUNDIVIHAR STADIUM ,MYSORE, KARNATAKA STATE ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...