×

புதியதாக திறக்கப்பட்ட பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் 2 கி.மீ தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார் திருவண்ணாமலையில் 33 ஏக்கரில்

திருவண்ணாமலை, டிச. 27: திருவண்ணாமலையில் புதியதாக திறக்கப்பட்ட மாநகராட்சி மு.க.ஸ்டாலின் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார். திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில், எடப்பாளையம் ஏரியை சீரமைத்து அழகுபடுத்தி சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, குழந்தைகளை கவரும் பூங்கா, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே உடற்பயிற்சி கூடங்கள், வண்ண மின்னொளி அலங்கரம் என அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ளன. சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் மு.க.ஸ்டாலின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள எழில் மிகு பூங்காவை கடந்த ஐந்தாம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு இந்தப் பூங்காவை பார்வையிட்டார்.

அப்போது, முதல்வரின் திடீர் வருகையை கண்டு பூங்காவில் இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், முதல்வர் கலந்துரையாடினார். அப்போது, இந்த பூங்கா தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது எனவும், பூங்காவை உருவாக்கிக் கொடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இதையடுத்து முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் ஆனந்தமாக செல்பி எடுத்துகொண்டனர். மேலும் பூங்காவில் சுற்றி அமைந்துள்ள நடைபாதையில் 2 கி.மீ தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார். மேலும், பூங்காவை சுற்றிப் பார்வையிட்ட முதல்வர் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு அம்சங்களை பார்வையிட்டார். மேலும், பொது மக்களின் தேவை அறிந்து, கூடுதலான வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார். அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி சி.என். அண்ணாதுரை, மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.ஸ்ரீதரன் மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், அருணை வெங்கட், உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Tiruvannamalai ,MK Stalin Park ,Tiruvannamalai-Thirukovilur road ,Edappalayam lake ,
× RELATED பீடி புகைத்த முதியவர் தீயில் கருகி பலி கட்டிலில் படுத்துக் கொண்டு