×

செருப்பு வாங்க வந்து தகராறு: கடை ஊழியரை தாக்கியவர் கைது

கோவை, ஏப். 24: கோவை குறிச்சி பிரிவை சேர்ந்தவர் முபாரக் (38). இவர் வெரைட்டி ஹால் ரோடு அடுத்த என்எச் ரோடு பகுதியில் உள்ள செருப்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது கடைக்கு ஒருவர் செருப்பு வாங்க வந்தார். அவர் ஒரு செருப்பை எடுத்து அதற்கு விலையை குறைத்து தரும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், முபாரக்கை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து முபாரக் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செருப்பு வாங்க வந்து முபாரக்கை தாக்கிய மதுக்கரையை சேர்ந்த யாகூப் கான் (45) என்பவரை கைது செய்தனர்.

The post செருப்பு வாங்க வந்து தகராறு: கடை ஊழியரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mubarak ,Coimbatore Kurichi division ,NH Road ,Variety Hall Road ,Dinakaran ,
× RELATED எஸ்ஐஆர் பணிகள்; பூர்வீக விவரங்கள் மீண்டும் ஆய்வு