×

மேட்டுப்பாளையம் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதியும் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று மாலை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகம், நகராட்சி தலைவர் மற்றும் காரமடை நகராட்சி தலைவர்களின் அறைகள் வருவாய் துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டு வருகின்றது.

 

Tags : Mettupalayam ,MLA ,Tamil Nadu ,Chief Election Commissioner of India ,Gyanesh Kumar ,Mettupalayam Municipality… ,
× RELATED கோவை மேற்கு புறவழிச்சாலை முதற்கட்ட பணி நிறைவு