×

தனியார் தொழிற்சாலையை தொழிலாளர்கள் திடீர் முற்றுகை

 

அன்னூர், மார்ச் 14: அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் அழகு சாதன பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டு வந்த நிலையில் உரிய ஆடர்கள் இல்லாததால் கடந்த டிசம்பர் மாதத்தில் மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய 400 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்க கோரிக்கை விடுத்தனர்.

Tags : Annur ,Pillaiyappampalayam ,
× RELATED 39 அடி உயர கால பைரவர் சிலைக்கு பாலாபிஷேகம்