×

பவள விழாவை முன்னிட்டு காவலர்கள் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்

கோவை, ஏப். 23: கோவை மாநகர காவல் துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய இந்த மருத்துவ முகாமை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார். இந்த முகாமில் காவலர்கள், ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கண் பார்வை, பல் சம்பந்தப்பட்ட பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, மூட்டு வலி, சிறுநீரக பரிசோதனை, குழந்தைகளுக்கான முழு பரிசோதனை, பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இதில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, பவள விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சு போட்டி, ஓவிய போட்டி, வினாடி – வினா, பொதுமக்கள் – போலீஸ் நல்லுறவு கிரிக்கெட் போட்டி, சைக்கிளிங், துப்பாக்கி சுடும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

The post பவள விழாவை முன்னிட்டு காவலர்கள் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Coral Festival ,Coimbatore ,Coimbatore City Police Department ,City Police Commissioner ,Saravana Sundar ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு