×

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் கைது

திருச்சி, ஏப்.17: திருச்சியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருச்சி, எ.புதுார், மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ஏப்.15ம் தேதி தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் ராம்ஜி நகரைச் சேர்ந்த சுந்தரம் மனைவி ஜெயா(25) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 45 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருச்சியில் கஞ்சா விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Liquor Prohibition Enforcement Division ,Mill Colony, A. Puthur, Trichy ,Dinakaran ,
× RELATED வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் தப்பிக்க...