×

சட்டீஸ்கர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஜாமீன்

புதுடெல்லி: சட்டீஸ்கரில் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபான விற்பனையில் ரூ.2000கோடி அளவுக்கு மிகப்பெரிய மோசடி நடந்ததாக வருமான வரித்துறை புகார் எழுப்பியது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அனில் துதேஜா உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அனில் துதேஜாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் நடைமுறைகளுக்காக துதேஜாவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஸ்போர்ட் ஒப்படைத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு துதேஜா ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

The post சட்டீஸ்கர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,IAS ,New Delhi ,Income Tax Department ,Congress ,Anil Dudeja ,Dinakaran ,
× RELATED இந்திரா காந்தி- மோடி வித்தியாசத்தை...