- இந்திரா காந்தி
- மோடி
- ராகுல்
- டிரம்ப்
- புது தில்லி
- எங்களுக்கு
- ஜனாதிபதி
- காங்கிரஸ்
- ராகுல் காந்தி
- பாஜக அரசு
புதுடெல்லி: பிரதமர் மோடியுடனான உறவுகள் மற்றும் வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகளின் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜ அரசை கடுமையாக சாடினார். 1971 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் இருந்தார் என்பது குறித்து பேசிய பழைய வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் பேசும்போது, இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. மோடி என்னை பார்க்க வந்தார். வருவதற்கு முன் உங்களை சந்திக்க வரலாமா என்று கேட்டார். அதற்கு நான் சரி என்றேன். ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா எண்ணெய் வாங்குவதாக நாங்கள் கருதினோம். எங்கள் அழுத்தத்தினால் இந்தியா தற்போது ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைத்துள்ளது என்றார்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியா- பாகிஸ்தான் போரின் போது, அதிபர் டிரம்பின் தொலைபேசி அழைப்பு வந்த பின்னர் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார். ஆனால் கடந்த 1971ம் ஆண்டு நடந்த போரின் போது அமெரிக்கா கடற்படை கப்பல்களை அனுப்பியும் போரை நிறுத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மறுத்து விட்டார். இதன் மூலம் இந்திரா காந்தி ஆட்சி, மோடி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
