×

தமிழ்நாட்டில் 62% பேருக்கு உடல் பருமன் பிரச்னை: அப்போலோ மருத்துவமனை ஆய்வில் தகவல்

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் சார்பில் ‘ஹெல்த் ஆப் தி நேஷன் 2025’ என்ற ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இருக்கும் அப்போலோ மருத்துவமனைகளில் 25 லட்சம் பேருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் வெளியே தெரியாமல் இருக்கும் தீவிர நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 26% பேர் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களாகவும், 23 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகளாகவும் அறியப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை மூலம், கல்லீரல் கொழுப்பு பரிசோதிக்கப்பட்ட 257 பேரில் 65% பேர் கல்லீரல் கொழுப்பு கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களில் 85 சதவீத பேர் மதுப்பழக்கம் இல்லாதவர்கள். 46% பேருக்கு அறிகுறிகளே இல்லாத இதயத்தமனி அடைப்பு ஆரம்ப நிலையில் உள்ளது. நீரிழிவு நோய் 14 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. உடல் பருமன் 76 சதவீதத்திலிருந்து 86 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகள், மாணவர்கள், கல்லூரி மாணவர்களில் 28 சதவீதம் எடை அதிகமுள்ளவர்கள் அல்லது உடல் பருமனாக இருக்கிறார்கள். அவர்களில் 19 சதவீதம் பேர் ரத்த அழுத்த நோய்க்கு உள்ளானவர்கள். ஊட்டச்சத்து சார்ந்த குறைபாடுகளில் பெண்களில் 77%, ஆண்களில் 82% வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். தமிழகத்தில் நீரிழிவு குறைபாடு 29% பேருக்கு உள்ளது. நீரிழிவு வரும் நுழைவாயிலிலில் உள்ளவர்கள் 37% பேர் உள்ளனர். கல்லீரல் கொழுப்பில் முதல் நிலை குறைபாடு 63 சதவீதம் பேருக்கு உள்ளது.

25 சதவீத பேர் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 62% பேர் உடல் பருமன் பிரச்னைகளுடன் இருப்பவர்கள். 17 சதவீதம் பேர் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, 80 சதவீத பேருக்கு எலும்பு ஆரோக்கியத்திலும், உடல் ஆற்றலிலும், நோய் எதிர்ப்பு சக்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்தசோகை 41 சதவீத பேரிடம் காணப்படுகிறது. மக்கள் அறிகுறிகள் வரும்வரை காத்திருக்க வேண்டாம். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது முன்னுரிமையாக இருத்தல் வேண்டும் என அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 62% பேருக்கு உடல் பருமன் பிரச்னை: அப்போலோ மருத்துவமனை ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Apollo Hospitals ,Chennai ,India ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...