×

நெய்வேலி பெரிய கண்மாய் வரத்து வாரி ரூ.10.50 லட்சத்தில் தூர்வாரும் பணிகள்

பொன்னமராவதி, ஏப்.12: பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலி பெரிய கண்மாய் வரத்து வாரி ரூ.10.50 லட்சத்தில் தூர் வாரும் பணியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு நீர்பாசனத்துறையின் தூர் வாரும் திட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி, நெய்வேலி பெரியகண்மாய் 3,500 மீட்டர் வரத்து வாரி ரூ. 10.50 லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணியினை தமிழக சட்டஅமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். தாசில்தார் சாந்தா, நீர்வளத்துறை பாசனப்பிரிவு செயற் பொறியாளர் கனிமொழி, உதவிசெயற் பொறியாளர் சுபாஷ்னி காரையூர் உதவி பொறியாளர் அழகுசுந்தரம்,

இதில், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, உதவி வேளாண் அலுவலர் நிசாபேகம், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், ஊராட்சி செயலர் ஜெகன், முன்னோடி விவசாயிகள் சுப்பையா, சின்னையா, கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post நெய்வேலி பெரிய கண்மாய் வரத்து வாரி ரூ.10.50 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Neyveli Periya ,Ponnamaravathi ,Minister ,Raghupathi ,Neyveli Periya Kanmai ,Tamil Nadu Government Irrigation Department ,Dinakaran ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்