×

விவசாய அடையாள எண் பதிவுக்கு 31ம்தேதி கடைசிநாள்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், டிச.27: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், உதவித்தொகை பெறுவதற்கான விவசாய அடையாள எண் பதிவுக்கு இம்மாதம் 31ம் தேதி கடைசிநாள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் என்பது இனி வருங்காலத்தில் அத்தியாவசியமான ஒன்று. ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால், விவசாய அடையாள எண் கண்டிப்பாக தேவை. மேலும், 22வது பிரதம மந்திரி கவுரவத்தொகை பெறுவதற்கும், பயிர் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கும் கண்டிப்பாக விவசாய அடையாள அட்டை எண் தேவை. எனவே, விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் அனைவரும், தங்களுக்கு அருகாமையில் உள்ள கணினி சேவை மையத்திலோ அல்லது வட்டார வேளாண்மை, தோட்டக்கலை அலுவலகங்களுக்கு சென்று தங்கள் ஆதார் மற்றும் கைபேசி, பட்டா விவரங்களுடன் சென்று இம்மாதம் 31ம் தேதிக்குள் பதிவு செய்து, விவசாய அடையாள எண் பெற்றுக்கொண்டு, அதன் பலன்களை தடையின்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kanchipuram ,Kanchipuram district ,Kalaichelvi Mohan ,
× RELATED சாதி பெயரைச் சொல்லி தாக்குதல் பெண்...