×

கண்களில் கருப்பு துணி கட்டி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

 

செய்யாறு, ஏப்.12: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றுகின்ற கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, பணி பாதுகாப்பு, பணியிட மாற்றம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு வேலூர் மண்டல துணைச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் எஸ்.ராஜேந்திரகுமார், செயலாளர் ஆர்.விவேகானந்தன், பொருளாளர் எம்.நூர்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராஜு, துணைச் செயலாளர் சக்திநாராயணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post கண்களில் கருப்பு துணி கட்டி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Seiyaru ,Tiruvannamalai District ,Seiyaru Scholar ,Anna Government College of Art ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...