×

ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர் கைது மேலும் 10 பேரை பிடித்து விசாரணை ஆரணி அருகே

ஆரணி, டிச.20: ஆரணி அருகே ஊர்நாட்டாண்மை கொலை வழக்கில் தலைமறைவான 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அருகேயுள்ள பார்வதிஅகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (55), ஊர் நாட்டாண்மை. இவர் நேற்றுமுன்தினம் அதே ஊரை சேர்ந்த தனது உறவினர் மகன் சந்துரு என்பவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார். அப்போது மயானத்தில் சுதாகருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சந்துருவின் நண்பர்களான சஞ்சய் (22), சித்தேரி கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (21) மற்றும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. இதன்பின்னர் அன்றிரவு தனியாக சுதாகர் நடந்துசென்றபோது அங்கு வந்த சஞ்சய், லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் இருந்து சுதாகர் தப்பியோட முயன்றபோது அவரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த சுதாகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதாகர் இறந்துவிட்டதாக ெதரிவித்தனர். அதன்பேரில் களம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையிலான போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தப்பிய கும்பலை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று சஞ்சய் மற்றும் லோகேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Arani ,Sudkar ,Parvathiagaram ,Kampur, Tiruvannamalai district ,
× RELATED மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு...