×

பீனிக்ஸ் ரெஸ்டாரன்ட் ஹோட்டலில் குளிரூட்டப்பட்ட உணவகத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்

 

கோவை, ஏப். 11:கோவையில் பிரபல எம்டிஎஸ் நிறுவனத்தாரின் பீனிக்ஸ் ரெஸ்டாரன்ட் ஹோட்டலின் குளிரூட்டப்பட்ட உணவகத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள பீனிக்ஸ் ரெஸ்டாரண்டில் குழந்தைகள் விளையாட சிறுவர் பூங்கா, குடும்பத்தினர் திரைப்படத்தை பார்த்து மகிழ்வுடன் உணவருந்த திறந்த வெளி உணவகம், மற்றும் தனி குடில்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏசி தனி ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இந்தியன், சைனீஸ் கான்டினென்டல், பிரெஞ்சு உணவு வகைகள் சிறந்த சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் ஓட்டல் உரிமையாளர் திருமுருகன், தினேஷ்குமார், சுரேஷ், மணிகண்டன், சுதாகர், உள்ளிட்டோர் உள்ளனர்.

The post பீனிக்ஸ் ரெஸ்டாரன்ட் ஹோட்டலில் குளிரூட்டப்பட்ட உணவகத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Phoenix Restaurant Hotel ,Coimbatore ,Senthil Balaji ,MTS ,Pollachi Road ,Phoenix Restaurant ,Hotel ,Dinakaran ,
× RELATED மோடி கிச்சன் துவக்கம்